நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், சிறப்பு மரபணு ஆலோசனை பிரிவு துவக்கம்.
நாகமங்கலத்திலுள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனைக்கு இன்று முதல், (17/10/2022), ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும், Dr.ஜணனி, மரபணு ஆலோசனை நிபுணர் வருகை புரிகிறார்.
மார்பக, சினைப்பை, தைராய்டு, கருப்பை, இரைப்பை, கணையம், மலக்குடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டவர்களின் உறவினர்கள், இந்த புற்று நோய்கள், மரபணு ரீதியாக குடும்பத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கும் வருவதற்கான வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து கொள்ள, இந்த மரபணு நிபுணரிடம் ஆலோசனை பெறலாம்.
இத்தகைய மரபணு ஆலோசகர்கள் ஒரு சில மையங்களில் மட்டுமே இருப்பார்கள்.
நம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், இத்தகைய பிரத்தியேக வசதியை ஏற்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.
மேலும், சிறப்பு சலுகையாக, அக்டோபர் மாதம், மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதமாதலால், இந்த மாதம் மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள உறவினர்கள், இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு:
7373731008
7373517771