Blog

அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்!

உலகெங்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் துவங்கி விட்டன.

திருச்சியில் ஒரு வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

முற்றிலும் மருத்துவர்களே பாடகர்களாக பங்கேற்கும் ஒரு சுவாரசியமான இசை நிகழ்ச்சி.

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு துறைகளை சார்ந்த சிறந்த மருத்துவர்கள் தங்கள் இசைத்திறமையை வெளிப்படுத்தவுள்ளனர்.

புற்றுநோய்க்கு எதிராக மருத்துவர்கள் குரல் ஒலிக்கிறது!

அனைவரும் வாரீர்.
சிறந்த இசை நிகழ்ச்சி. இடையிடையே பலகுரல் மன்னன், “விஜய் தொலைக்காட்சி” புகழ் ஈரோடு சஞ்சய் அவர்களின் நகைச்சுவை, ரஜினி, கமல் போன்ற நிழல் நடிகர்களின் நடனம் என அரங்கம் அதிரவுள்ளது.

மார்பகப்புற்று நோய் பற்றி மக்களை பேச வைக்கும் இந்த நூதன முயற்சி, திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ்கார்டன் அறக்கட்டளை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மருத்துவர்களை தாக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெறுவதை மையப்படுத்தி பொது மக்களிடையே மருத்துவர்களின் மகத்துவத்தை எடுத்துச்சொல்லும் ஒரு ஆங்கிலப் பாடலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பாடலை மருத்துவர்களே எழுதி இசையமைத்துள்ளனர்.

மருத்துவ சமூகமே!
நம் மருத்துவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு கை கொடுப்போம்.

பொது மக்களே!
மருத்துவர்கள் மக்களை நோக்கி வரும் இந்த சிறிய முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்.

உங்கள் பங்கேற்பே இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு ஆதரவு!

நாள்: அக்டோபர் 6, ஞாயிறு
இடம்: தேவர் ஹால்
நேரம்: மாலை 4 மணி முதல் 7 மணி வரை.

இந்நிகழ்வில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் புகைப்பட மற்றும் குறும்பட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.25000 பரிசு வழங்கப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு
7373621777, 7373731008