Blog

ஹர்ஷமித்ரா புற்றுநோய் இலவச சிகிச்சை அட்டை

*ஹர்ஷமித்ரா புற்றுநோய் இலவச சிகிச்சை அட்டை*

*முன்னுரை:-*

ஹர்ஷமித்ரா புற்றுநோய் இலவச சிகிச்சை அட்டையானது ஹர்ஷமித்ரா மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம். புற்றுநோய் மனித சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்து விளைவிக்க கூடிய ஒரு நோயாக வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் புற்றுநோயின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையின் செலவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் உள்ள அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் கண்ணோட்டத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களால் புற்றுநோயின் சிகிச்சைகளுக்கான செலவை முழுவதுமாக சந்திக்க முடியாமல் புற்றுநோயின் சிகிச்சையை அரை குறையாக செய்ய நேரிடுகிறது. இதனால் வியாதி முற்றி இறந்து போக வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே ஹர்ஷமித்ரா மருத்துவமனை இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது புற்றுநோயினால் பாதிக்கப்படும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் , ‘நலனை கருதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

*அம்சங்கள்:-*

இந்த ஹர்ஷமித்ரா இலவச புற்றுநோய் சிகிச்சை அட்டையை வைத்திருக்கும் நபர்களுக்கு ஹர்ஷமித்ரா மருத்துமனையில் இலவச புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படும். ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, மருந்தியல் சிகிச்சை மற்றும் ‘டார்கெட் தெரபி சிகிச்சை (இணைப்பில் உள்ள மருந்துகளுக்கு மட்டும் பொருந்தும்)ஆகியவை | அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த எல்லா சிகிச்சை முறைகளும் இந்த அட்டையை வைத்திருக்கும் நபர்களுக்கு இலவசமாக அளிக்கப்படும்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*

1. இந்த அட்டைக்கான விலை ரூபாய் 1000 மட்டுமே ஆண்டு : ‘புதுப்பித்தலுக்கான கட்டணம் ரூபாய் 1000, 2. இந்த திட்டத்தில் ஒரு அட்டை ஒரு நபருக்கு மட்டுமே பொருந்தும்.

2. ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் அளிக்கப்படும் எல்லா புற்றுநோய் சிகிச்சை முறைகளும் இந்த அட்டையின் மூலம் அளிக்கப்படும்.

3. ஹர்ஷமித்ரா மருத்துவமயிைன் நிபுணர்களால் அளிக்கப்படும் எல்லா சிகிச்சை முறைகளுக்கும் இது பொருந்தும்.

4. இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் சர்வதேச தரத்தில் ஆன சிகிச்சை முறையான ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் Tumour Board முடிவு செய்யும் சிகிச்சைகள் ஆகும்.

5. இந்த அட்டையை பெற்ற முதல் வருட காலத்திற்கு இந்த திட்டம் அமலுக்கு வராது. புதுப்பித்தலுக்கு பிறகு முழுவதுமாக அமலுக்கு வந்துவிடும்.

6. இந்த ஒரு வருட காலத்திற்குள்ளாகவோ அல்லது அதற்கு முன்னராகவோ புற்றுநோய்கான அறிகுறிகள் ஏதேனும் இருப்பதாக அவருடைய பதிவுகள் மூலம் தெரியவந்தால் இந்த அட்டையின் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படமாட்டாது. இது நோயாளிக்கு அறிந்தோ அல்லது அறியாமலோ அவருக்கு புற்றுநோய் இருந்ததற்கு ஆன ஆதாரம்
நிருபிக்கப்பட்டால் இந்த அட்டை செல்லாது.

7. இந்த அட்டையின் மூலமாக அளிக்கப்படும் இலவச சிகிச்சை ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் உள்ள சிகிச்சை முறைகளுக்கு மட்டுமே பொருந்தும். பிற மருத்துவமனையில் உள்ள சிகிச்சைகளுக்கு இந்த அட்டையின் மூலம் இலவச சிகிச்சை கிடைக்காது.

8. ஆண்டு தோறும் சரியான சமயத்தில் புதுப்பித்தால் மட்டுமே இந்த இலவச சிகிச்சை அளிக்கப்படும். புதுப்பிக்கவில்லை என்றால் அட்டை செயல் இழந்து விடும்.

9. இந்த அட்டையானது இலவச புற்றுநோய் சிகிச்சைக்கு மட்டுமே, இது ஒரு காப்பீட்டு திட்டம் கிடையாது.

10. புற்று நோயால் ஏற்படும் மரணங்களுக்கோ அல்லது செயல் இழப்பிற்கோ இந்த அட்டை மூலம் எந்த நிவாரணமும் அளிக்கப்படமாட்டாது. இது முழுக்க முழுக்க சிகிச்சைக்கு மட்டுமே.

11. பதிவு கட்டணமான ரூபாய் 1000 மற்றும் புதுப்பித்தல் கட்டணம் ‘எதுவுமே திருப்பி அளிக்கப்படமாட்டாது.

12. சிகிச்சைக்கான முடிவுகள் சம்மந்தப்பட்ட அனைத்திற்கும் – ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் எடுக்கும் முடிவே இறுதியானது.

13. புற்றுநோய் கண்டுபிடிப்பதற்கு முன்னராகவே எடுக்கப்படும் எந்த பரிசோதனைகளுக்கும் இந்த அட்டையின் மூலம், இந்த திட்டத்திற்குள் வராது.

14. ஆனால் புற்றுநோய் கண்டறிந்த பின்னர் மருத்துவமனையில் உள் நோயாளியாக எடுக்கப்படும் அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக அளிக்கப்படும்.

15. உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு அளிக்கப்படும். சிகிச்சைகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் இலவசமாக அளிக்கப்படும்.

16. சிகிச்சையோ, பரிசோதனைகளோ அல்லது மருந்துகளோ வெளி நோயாளிகளாக இருந்து கொண்டு செய்வதாக இருந்தால் அது இந்த திட்டத்தில் உள் வராது. ஆனால் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் ஒரு சில மருந்துகள் வெளி நோயாளிகளாக அளிக்கப்படும்.

17. பாலது மருந்துகளோ வேறு மருத்துவமனையிலோ அல்லது வேறு மருந்தகத்திலிருந்து, வாங்கியிருந்தால் இத்திட்டத்தின் கீழ் வராது. அதற்கான கட்டணம் ) எதுவும் அளிக்கப்பட மாட்டாது.

18. இந்த அட்டையை வைத்திருப்பவர் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் ‘ மட்டுமே இலவச சிகிச்சை எடுத்து கொள்ள முடியும்.

19. இந்த அட்டை ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு மாற்றி கொள்ள அனுமதி கிடையாது.

20. அட்டையை வைத்திருப்பவர்களுக்கான சிகிச்சை ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் முதல் தர அறைகளிலே அளிக்கப்படும். (அறை இருக்கும் பட்சத்தில்)

21. சிகிச்சையின் போது அளிக்கப்படும் மருந்துகள், பரிசோதனைகள், அறுவை சிகிச்சை போன்றவை மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வரும். நோயாளிகளின் உணவு அல்லது உடன் இருப்பவர்களின் செலவு இத்திட்டத்தில் வராது.

22. ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் உள்ள சிகிச்சை முறைகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். இதில் இல்லாத சிகிச்சைகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

23. புற்றுநோயில் இருந்து குணமடைந்த பிறகு மறுபடியும் அதே நபருக்கு மீண்டும் புற்றுநோய் வருமாயின் அது இத்திட்டத்தின் கீழ் செல்லாது.

24. மாத கால இடைவெளிக்கு பிறகு மறுபடியும் புற்றுநோய் வருமானால் அது மறுபடியும் புதிதாக வந்த புற்றுநோயாகவே ‘கருதப்படும். இது இத்திட்டத்தில் அடங்காது.

25. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

26. பரிசோதனையில் உள்ள மருந்துகள் எதுவும் இத்திட்டத்தில் பொருந்தாது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது விற்பனையில் உள்ள மருந்துகள் மட்டும் பொருந்தும்.

27. இத்திட்டத்தை பற்றி விபரங்கள் அவ்வப்பொழுது நம் இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.

*ஹர்ஷமித்ரா இலவச சிகிச்சை ‘அட்டை வைத்திருப்பவரின் நன்மைகள்…*

1. இத்திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கு அப்ரூவல் போன்ற தடங்கல்கள் எதுவும் கிடையாது. புற்றுநோய் என கண்டறிந்தவுடன் தாமதமின்றி அட்டையை காண்பித்து உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

2. ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் எந்த ஒரு சிகிச்சையும் தாமதப்படுத்தாமல் விரைவாக அளிக்கப்படும்,

3. மாதம் தோறும் ரூபாய் 100க்கும் குறைவான தொகையிலேயே இத்திட்டம் முற்றிலும் இலவச புற்றுநோய் சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. அதுவும் திருச்சியில் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில், புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர்கள் மூலம் சர்வ தேச முறையில்.

4. பொதுவாக புற்றுநோய் சிகிச்சைக்கு 5 முதல் 10 லட்சம் வரை செலவாகிறது. ஒரு சில புற்று நோய்களுக்கு 30 லட்சம் வரைகூட செலவாகிறது, ஆனால் இத்திட்டத்தின் மூலம் அட்டையை வைத்திருப்பவர்களுக்கு முழுவதும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.

5. ஆரம்ப கட்ட புற்றுநோய்களான CIN கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய்கள் பெரும்பாலான காப்பீடு திட்டங்களில் செயல்படுத்தப்படுவதில்லை. ஆனால் ஹர்ஷமித்ராவின் இலவச புற்றுநோய் சிகிச்சை அட்டை மூலம் எல்லா வகையான ‘புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.

6. துரதிஷ்டவசமாக புற்றுநோயால் பாதிக்கப்பட நேர்ந்தால் கூட எந்தவொரு மனகவலையும் இல்லாமல் பண செலவும் இல்லாமல் முழுபுற்றுநோய் சிகிச்சையும் சர்வ தேச தரத்தில் பெற்று கொள்ள இத்திட்டம் மிகவும் பலனளிக்க கூடியதாக அமையும்.

7. இந்த அட்டையை வைத்திருப்பவர்களுக்கு
புற்றுநோயின் – ஆரம்பக்கட்ட பரிசோதனைகளுக்கு 50% சலுகை வழங்கப்படும்

மேலும் விபரங்களுக்கு : http://harshamitra.com/

*ஹர்ஷமித்ரா – இலவச புற்றுநோய் தகவல் மையம்,திருச்சி*
தொலைபேசி : 0431-2751008, 7373731008