16.07. 2022
சனிக்கிழமை
நமது ஹர்ஷமித்ரா மருத்துவ மனையில்
Servite nursing college.திருச்சி யில் இருந்து B. Sc மற்றும் M. Sc பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 100 பேர் பயிற்சி கல்வி சுற்றுலா நிமித்தமாக
நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவ மனை க்கு வந்திருந்தனர்.
மாணவ மாணவிகள் அனைவரையும் மருத்துவ மனை நிர்வாக இயக்குனர்கள் Dr. G. Govindaraj Ms Mch அவர்கள் மற்றும் Dr. P. Sasipriya Govindaraj MD RT அவர்கள் வரவேற்றனர்.
பேராசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் விருப்ப கோரிக்கை க்காக மாணவ மாணவிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு
புற்று நோய் பற்றிய வகுப்பும், கதிரியக்க சிகிச்சை பற்றிய பயிற்சி வகுப்பு களும் நடத்தப்பட்டது.
புற்று நோய் பற்றிய அறிமுகம், காரணங்கள், அறிகுறிகள் சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து ம் மற்றும்
கதிரியக்க சிகிச்சை குறித்தும் Dr. P. Sasipriya Govindaraj MD RT Radiation oncologist அவர்கள்பயிற்சி அளித்தார்
மருத்துவ சேவை யோடு கல்வி சேவை யையும் செய்து வரும் நமது ஹர்ஷமித்ரா மருத்துவ மனை சார்பில் Servite கல்லூரி க்கும்
பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் அன்புடன் நன்றி யும் தெரிவித்துக் கொள்ள பட்டது.