மேலே காணப்படுபவரின் பெயர் S.இராஜேந்திரன் வயது54, அன்றாட தினக்கூலி வேலை செய்பவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அன்றாட உணவுக்கே அல்லாடும் இந்நிலையில், இவருக்கு வயிற்று பகுதியான, இரைப்பையில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. பல்வேறு வகையான மருத்துவ மனைகள் சென்று, சிகிச்சை பெற பணமில்லாத அந்த நோயாளி, நமது ஹர்ஷமித்ரா மருத்துவ மனைக்கு வந்தவுடன் அவருக்கு அம்மா காப்பீட்டு திட்டத்தின் மூலமாக அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. சில உதவிகளும் ரோஸ் கார்டன் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இவரது சிகிச்சையை தொடர்வதற்கான பணம் அவரிடம் இல்லை. எனவே, கருணை உள்ளம் கொண்ட எவரேனும் இவருக்கு உதவ விரும்பினால் , கீழ்க்கண்ட நம்பருக்கு போன் செய்யவும். தொடர்புக்கு, ரோஸ் கார்டன் இலவச புற்றுநோய் அறக்கட்டளை, No:41, நாச்சியார் கோயில் மெயின் ரோடு, உறையூர், திருச்சி. போன்: 7373806777, 7373854777 காசோலையாக அனுப்ப விருப்பம் உள்ளவர்கள், கீழ்க்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பவும். NAME :Rosegarden AC NUM: 60152010058590
Leave a Comment
You must be logged in to post a comment.