Awareness

WORLD TOBACCO DAY AWARENESS TALK BY DR.G.GOVINDARAJ ON 07/06/2023 AT INDRA GANESAN COLLEGE OF ENGINEERING.

உலக புகையிலை தினத்தை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் அறக்கட்டளை இணைந்து இந்திரா கணேசன் பொறியியல் அறிவியல் கல்லூரியில் புகையிலை பாதிப்பை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் DR கோவிந்தராஜ் அவர்கள் புகையிலை விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார். இதில் 250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ராவின் செயல்பாடுகளில் திருச்சி மாவட்டம் முழுதும் உள்ள கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக கல்லூரிகள் கல்லூரிகள் தோறும் புற்றுநோய் விழிப்புணர்வு என்ற தலைப்பில் புற்றுநோய் பற்றிய கருத்து அரங்குகள் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று எட்டாம் நாளாக (8/2/2023)திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சீதாலட்சுமி ராமசாமி பெண்கள் தன்னாட்சி கல்லூரியில் உணவு மற்றும் போஷாக்கு அதாவது நியூட்ரிஷியன் அண்ட் டைட்டீஷியன் துறையில் பயின்று வரும் மாணவிகளுக்கு நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாகி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் இந்த நிகழ்வில் சுமார் 70 மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வின் தொடக்கமாக நியூட்ரிஷன் டிபார்ட்மென்ட் தலைவர் அவர்கள் நம் மருத்துவரை வரவேற்று கவுரவிக்க விழாவானது தொடங்கியது .இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவரும் புற்றுநோயை பற்றி ஒன்றுமே தெரியாமல் அமர்ந்திருந்த அவர்கள் புற்றுநோய் என்றால் என்ன புற்றுநோய் எவ்வாறு வருகிறது அது எந்த விதத்தில் பரவுகிறது எவ்வாறு உயிர் கொள்ளியாக மாறுகிறது என்ற எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்த அவர்கள் உரை நிகழ்வில் அனைத்தையும் புரிந்து கொண்டு புற்றுநோய் என்றால் என்ன தெரிந்து கொண்டோம் புற்றுநோய் பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் வராமல் தடுப்போம் அதற்கான வழிமுறைகள் என்னவென்று நாங்கள் நன்றாக புரிந்து கொண்டோம் என்ற உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு உரையின் நிறைவில் நம் மருத்துவரிடம் பலவிதமான சந்தேகங்களையும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்ற வழிமுறைகளையும் தெரிந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொண்டனர் மாணவர் மாணவிகள் புற்றுநோய் பற்றி புரிதலை ஏற்படுத்திய நமது மருத்துவமனை ஏற்படுத்தியுள்ள qr கோடில் பதிவு செய்து அதை ஒரு விழிப்புணர்வு சாதகமாக பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். விழா நிறைவில் நமது நிர்வாகி அவர்கள் துணைத்தலைவருக்கு பொன்னாடை போர்த்த நன்றி உரையுடன் விழா இனிதே முடிவடைந்தது .

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

இன்று 7.2.2023 நமது திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் உலக புற்றுநோய் தின நிகழ்வாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் கல்லூரியில் புற்று நோய்க்கான விழிப்புணர்வு பேருரையானது நமது ஹர்ஷமித்ராவின் நிர்வாக இயக்குனர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது இந்நிகழ்வில் முதல்வர் மற்றும் துறை தலைவர்கள் பங்கு கொண்டு நிறுவனத்தின் தாளாளர் திரு சீனிவாசன் ஐயா அவர்களால் கௌரவிக்கப்பட்டு இந்த நிகழ்வானது தொடங்கியது இந்த நிகழ்வில் 300 மாணவிகள் பங்கு கொண்டனர் நம் நிறுவனத் தலைவரின் அன்பான சொற்பொழிவை கேட்டு அவர்கள் புற்றுநோய் இல்லா உலகத்தை படைப்போம் என சபதம் ஏற்றுக் கொண்டனர் இன்று அவர்களுக்கா க இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற ஒரு கியூ ஆர் கோடு வழங்கப்பட்டது அதில் அவர்கள் கேன்சர் கான நிகழ்வுகளை நம் மருத்துவமனை மூலம் தெரிந்து கொள்வதற்கும் மற்றும் அவர்கள் கேன்சருக்கான புதிய பரிணாம நிகழ்வுகள் ஏதும் செய்வது என்றால் இந்த க்யூ ஆர் கோடை பயன்படுத்தி செய்வதற்கும் புற்றுநோயை ஒழிப்போம் என்ற சபதத்தை விடாமல் கடைப்பிடிப்போம் கடைப்பிடிப்பதற்காகவும் இந்த க்யூ ஆர் கோடு எனது இன்றைய தினத்தில் உருவாக்கப்பட்டது இதில் புற்றுநோய் பரவுவதை தடுப்பதற்கும் தங்களின் பெற்றோர்களுக்கு புற்றுநோய் வராமல் காப்பதற்கும் தாங்கள் புற்றுநோயிலிருந்து காத்துக் கொள்வதற்கும் அனைத்து மாணவிகளும் சபதம் ஏற்று கொண்டனர் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் விளம்பர துறையின் சார்பாக சிவ அருணாச்சலம் முபின் பேகம் மற்றும் டிரைவர் மதி நன்றி வணக்கம்

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மூன்று இரண்டு 23 ஆகிய இன்று புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மூன்றாவது நிகழ்வாக ஒரே நாளில் எமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர் கோவிந்தராஜ் வரதன் எம்பிபிஎஸ் எம் எஸ் எம் சி ஹெச் எஃப் ஐ சி எஸ் அண்ட் பி எஸ் சி புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அவர்களும் மற்றும் மருத்துவர் திருமதி பி சசி பிரியா கோவிந்தராஜ் எம்பிபிஎஸ் எம் டி ஆர் டி புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சை நிபுணர் அவர்களும் மூன்று கல்லூரிகளில் இன்ற இந்த ஒரே நாளில் பங்கு கொண்டு சிறப்புரையாற்றியது உண்மையில் புற்றுநோய் காண அறிவானது இந்த எதிர்வரும் நாலாம் தேதி புற்றுநோய் தினமாகிய அந்த நாளில் ஏற்படும் சூளுரையாக அமையும் என்பது மிகாது இந்த நாளில் மாலை மூன்று முப்பது மணி அளவில் எமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி புத்தூர் நால் ரோட்டில் அமைந்துள்ள பிஷப் கீப்பர் கல்லூரியில் புற்றுநோய் காண பேருரை நிகழ்த்தினார்கள் இதில் மூன்று ஆர்மி ஆபீஸர்ஸ் தலைமையில் 120 என்சிசி ஆர்மி மற்றும் ஸ்கவுட் துறையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த கருத்தரங்கில் பங்கு கொண்டனர் இந்த கருத்தரங்கின் முக்கிய நிகழ்வான சொற்பொழிவானது மருத்துவர் அவர்களால் வழங்கப்பட்டது இதில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளும் புற்றுநோய் என்றால் என்பதை புற்று நோய் என்றால் என்ன என்பதை மருத்துவரின் விளக்கத்தோடு நன்கு புரிந்து கொண்டு மருத்துவர்களிடம் பலவிதமான வினாக்களை விவி தாங்கள் எவ்வாறு புற்றுநோயை புரிந்து கொண்டோமோ அது போல் இந்த உலகத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்ற சபதம் ஏற்று தங்களுக்குள்ளே whatsapp குரூப் அமைத்து அதில் புற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகளையும் புற்றுநோய் எதனால் உருவாகிறது எந்தெந்த பொருட்களை உட்கொள்வதால் வருகிறது என்பதையும் புற்றுநோய் வராமல் எவ்வாறு நமது தேகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தமது குரூப்புகளில் பதிவிட்டு ஒருவர் கூட இனி புற்றுநோயால் பாதிக்க கூடாது ஆரம்ப நிலையில் கண்டுகொண்டு உலக மக்களுக்கு அதற்குரிய விழிப்புணர்வை வழங்குவோம் என்று சபதம் ஏற்று கொண்டனர் இந்த நிகழ்வில் மருத்துவர் அவர்கள் கௌரவிக்கப்பட்டு விழா நன்றியுரைடன் இனிதே முடிவடைந்தது

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இரண்டு 2023 அன்று மாலை ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அவர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாசு கட்டுப்பாட்டு துறையில் பயிலும் சுமார் 100 மாணவர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு காண சிறப்புரை ஆற்றினார்கள் இந்த விழாவில் பாரதிதாசன் யூனிவர்சிட்டியின் மாசு கட்டுப்பாட்டு துறையின் தலைவர் அவர்களின் தலைமையில் சிறப்பு நடைபெற்றது இந்த நிகழ்வில் நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அவர்கள் புற்றுநோய்க்கான சிறப்பு குழுக்கள் அமைத்து நீங்கள் மாணவர்களாகிய நீங்கள் புற்றுநோய் எதிர்காலத்தில் பரவாமல் தடுக்க எவ்வாறு பாடுபட வேண்டும் அதனால் பொதுமக்கள் எவ்வாறு பயன்பட வேண்டும் புற்றுநோய் என்ற கொடிய நோயை எவ்வாறு நாம் இவ் உலகை விட்டு ஒழிப்பு கட்ட வேண்டும் என்பதற்கு சிறப்புரையை நிகழ்த்தினார்கள் இச்செய்திகளை மாணவர்களுக்கு குறும்படம் வாயிலாகவும் புகைப்படக்கத்தால் ஒரு குடும்பம் அல்லல்படும் நிலைமையை ஒரு சிறுமி தன் தந்தையை இழந்து படும் வேதனையை ஒரு கூறும் படமாக வடிவ வடிவமைத்து அதை மாணவர்களிடையே ஒளிபரப்பு செய்து மாணவர்கள் புற்றுநோய் என்னும் கொடிய நோயிலிருந்தும் போதை போதை வஸ்துக்கள் போதை மாத்திரைகள் மது பழக்கங்கள் இவைகளில் இருப்பவர்களும் இல்லாதவர்களும் இனி இந்த கொடிய நோய் பரவாமல் தடுப்பதற்கு நாங்கள் இன்றிலிருந்து சபதம் மேற்கொள்கிறோம். என ஒருமனதாக அனைவரும் தங்கள் கரங்களைத் தூக்கி சபதம் செய்தனர் விழாவில் நிர்வாக இயக்குனர் திரு மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் துறை த்தலைவர் அவர்களால் கௌரிக்கப்பட்டு நன்றி உரையுடன் இனிதே முடிவேந்தர் முடிவடைந்தது

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நமது ஹர்ஷமித்ரா மருத்துவ மனை சார்பாக திருச்சி மணிகண்டத்தில் அமைந்துள்ள இந்திரா கணேசன் பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் அவர்கள் பங்கு கொள்ள நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அவர்கள் தலைமை ஏற்று சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் இந்த நிகழ்வில் இந்திரா கணேசன் கல்லூரியின் படிக்கும் திரளான மாணவர்கள் ஏறக்குறைய 300 மாணவர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் புற்றுநோய் எவ்வாறு வருகிறது நாம் நம்மை காத்துக் கொண்டு பிறருக்கும் வராமல் தடுப்பது எந்த விதத்தில் சாத்தியம் என்பதை நமது நிர்வாக இயக்குனர்கள் அழகாக எடுத்துரைக்க மாணவர்கள் அனைவரும் நன்றாக புரிந்து கொண்டு இன்றைய நாளில் புகை சம்பந்தப்பட்ட எந்த வஸ்துக்களையும் புகையிலை சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் தொடுவதில்லை அவ்வாறு உபயோகித்தவர்களை தடுப்பதற்கும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் ஒவ்வொரு மாணவர்களும் மாணவிகளும் தங்களது தாய் மீது கொண்ட பாசத்தை புற்றுநோய் வராமல் தடுக்கும் சில பரிசோதனைகள் செய்து புற்றுநோய் வராமல் தடுப்போம் புற்றுநோயின் பிடியிலிருந்து பெற்றோர்களை
காப்போம் என உறுதி மேற்கொண்டனர்

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் 01/02 / 2023 அன்று காலை 10 மணி அளவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சிறப்புரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் 900 மாணவ மாணவிகள், ஊழியர்கள், கல்லூரியின் முதல்வர், தாளாளர் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் தமது உரையில் புற்றுநோய் என்றால் என்ன, அதில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது, பிறருக்கும் புற்றுநோய் வராமல் எவ்வாறு தடுப்பது, அதற்கான வழிமுறைகளை எல்லோரும் எளிமையாக புரிந்து கொள்ளும் அளவில் உரையாற்றினார். அதோடு பங்கு கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளும் புற்று நோய்க்கான தடுப்பு முறையில் நாங்கள் தொண்டாற்றுவோம் எவ்வாறு எனில், எங்கள் பெற்றோர்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான விதிமுறைகளை முதலில் கூறுவோம். பின்பு எங்களது கைபேசியில் ஒரு whatsapp குரூப் அமைத்து அந்த குரூப்பில் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி,ஆரம்பத்திலே எவ்வாறு குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் கூறிய அனைத்து செய்திகளையும் அதில் பதிவிட்டு அதை பார்க்கும் ஒவ்வொருவரும் புகை பிடிக்காமலும், குட்கா,ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள், மதுப்பழக்கம் இருந்தால் அதை தடுக்கும் முயற்சியில் நாங்கள் அனைவரும் பங்கு கொள்வோம் என்று சபதம் மேற்கொண்டனர். பின்பு கல்லூரியின் முதல்வர் அவர்களால் மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கௌரவிக்கப்பட்டார் .
இந்த விழாவில் அசிஸ்டன்ட் கமிஷனர் சுரேஷ்குமார் அவர்களும் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பொது மருத்துவ முகாம்

நாள் : 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

இடம் : அன்னை சாரதா கிளினிக், அரசு மேல் நிலைப்பள்ளி அருகில், செட்டிகுளம்,
பகுதியில் இலவச பொது மருத்துவ மற்றும் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திரு. சோமு.மதியழகன் அவர்கள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தலைமை‌யி‌ல் நடைபெற்றது.

– முகாமை உயர்திரு. ந.கிருஷ்ணமூர்த்தி B.A., அவர்கள்
ஆலத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் தொடங்கி வைத்தார்.

திரு.R.திருநாவுக்கரசு அவர்கள் முன்னிலை வகித்தார்

சிறப்பு விருந்தினராக திருமதி. கலா தங்கராசு அவர்கள் ஊராட்சி மன்றத்தலைவர், செட்டிகுளம்

ஒன்றியக்குழு உறுப்பினர், செட்டிகுளம் திருமதி. R.காமாட்சி அவர்கள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர், செட்டிகுளம் வந்திருந்து சிறப்பித்தனர்.
முகாமில்
டாக்டர்.த.கதிரவன்
டாக்டர். க.அறிவழகன்
ஸ்கேன் மருத்துவர்

எலும்பு மூட்டு சிகிச்சை நிபுனர்

டாக்டர். ம.செல்வராசு
பொது மருத்துவ நிபுனர்

டக்டரா.நெடுஞ்செழியன்
குழந்தைகள் நலம் மற்றும் நெஞ்சக மருத்துவர்

டாக்டர், த.ஜெயலட்சுமி
மகப்பேறு மருத்துவர்

டாக்டர். M.செந்தில்வேல் (Vasan Eye Care) கண் & பொது அறுவை சிகிச்சை நிபுனர்
டாக்டர். தி.சுதாகர்தோல் நோய் சிறப்பு மருத்துவர்
டாக்டர். T.K. சிவக்குமார்
காது, மூக்கு, தொண்டை மருத்துவர்
டாக்டர். அ.கருணாநிதி டாக்டர். அறிவு ஸ்டாலின்
பல் மருத்துவர்

டாக்டர். G.கோவிந்தராஜ் வர்தனன் அவர்கள்

டாக்டர். சசி பிரியா கோவிந்தராஜ் ஹர்ஷமித்ரா மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள். திருச்சி
எலைட் (Elite) லேப்
செட்டிகுளம் ஆகியோர் கல‌ந்து கொண்டு பொது மக்களுக்கு இலவச மருத்துவ பரி சோதனை செய்தனர்.

டாக்டர். செ.வல்லபன், டாக்டர். கலா வல்லபன் வ.சிட்டிபாபு M.B.B.S.,

அன்னை சாரதா கிளினிக்,
ஆகியோர் நன்றி உரை நிகழ்த்தினார்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

நேற்று 16/11/2022 வியாழக்கிழமை அன்று பெரம்பலூர் ராயல் சென்டினியல் லயன்ஸ் சங்கம் முன்னிலையில் அம்மா மருத்துவமனை மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கருப்பை வாய் மற்றும் papsmear பரிசோதனை, மேலும் மார்பக பரிசோதனை, தெர்மோகிராம் பரிசோதனை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.
இதில் 100 மக்கள் கலந்துக்கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

இன்று (7/11/2022) திங்கட்கிழமை தேசியப்புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அன்று jamal Mohamed college இல் நடைபெற்ற
புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr.P.Sasipriya Govindaraj M.B.B.S.,M.D.,D.M.R.T.,
M.sc ( pshycology)அவர்கள் கலந்துக்கொண்டு புற்றுநோய் பற்றி சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயனளிக்க செய்தார்.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சந்தேகங்களை கூறி அதற்கு தீர்வுகள் பெற்றுக் கொண்டார்கள்.