Awareness

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

இன்று 30/10/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி NIT college இல் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹர்ஷமித்ரா நிர்வாக இயக்குநர் Dr.G.GOVINDARAJ .
MBBS. Mch அவர்கள் கலந்துக்கொண்டு அங்குள்ள மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரின் சந்தேகங்களையும் தீர்த்து பயன் பெறச் செய்தார்.சுமார் 200 மாணவர்கள்‌ இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர், இவற்றுள் 118 மாணவர்கள் எங்களது மருத்துவ குழுவினர் மூலம் பரிசோதனை மற்றும் தெர்மோகிராம் பரிசோதனை‌யை எடுத்துக்கொண்டு பயன் பெற்றனர்

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

இன்று 27/10/2022 (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் வானொலி ‘வசந்த அழைப்பு ‘ (FM Rainbow 102.1 ) என்னும் நிகழ்ச்சியில் டாக்டர். Sasipriya MD RT ( ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குநர்) அவர்கள் கலந்துக்கொண்டு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.அத்துடன் பொது மக்களின் சந்தேகங்களை தீர்த்து மக்கள் பயன்பெறச் செய்தார்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் ஆனது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதி பிங்க் அக்டோபர் மாதம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாதம் முழுவதும் நடத்தி வருகிறது. அதேபோல் இவ்வாண்டும் திருச்சி ஹர்ஷமித்ரா பல்நோக்கு மருத்துவமனை தமிழக அரசின் மக்களைத் தேடி என்ற மருத்துவ முகாம் போல ஹர்ஷமித்ரா மருத்துவர்கள் அடங்கிய குழுவானது தெர்மோகிராம் எனப்படும் ரூ 3500 மதிப்புள்ள மார்பக ஸ்கேன் பரிசோதனைகளை ரூபாய் 500க்கு திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாகவே விழிப்புணர்வு பேரணி நடத்தியது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் திருச்சி தெற்கு டிஎஸ்பி ஸ்ரீதேவி, பெரியார் மணியம்மை முதல்வர் செந்தாமரை நிய பேருந்து நிலையம்

ஹர்ஷமித்ரா

மருத்துவமனையும், திருச்சி

பெரியார் மருந்தியல்

கல்லூரியும் இணைந்து

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை

மருந்தியல் கல்லூரியின்

ஆகியோர் கொடியசைத்து

தொடங்கி வைத்தனர்

திருச்சி மத்திய பேருந்து நிலையம்

பெரியார் சிலையில் தொடங்கிய பேரணி ஜென்னிஸ் ஹோட்டல் வழியாக திருச்சி ரயில் நிலைய ரவுண்டானா மற்றும் மிளகு பாறை வழியாக திருச்சி கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது பேரணியில் பங்கேற்ற ஹர்ஷமித்ரா மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து

நடத்தும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி – தொடர்பாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதமானது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதி “பிங் அக்டோபர்” மாதம் என WHO அறிவித்துள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. உதாரணமாக அமெரிக்காவின் ஈபிள் டவர் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிர்வது. இதனைப் போலவே திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையும் கடந்த 4 ஆண்டுகளாக நமது திருச்சி மலைக்கோட்டையை இளஞ்சிவப்பு விளக்குகளால் ஒளிர்வித்தது.

அதுபோல் இவ்வாண்டும் தமிழக அரசின் மக்களைத்தேடி மருத்துவம் போல்

ஊர்ஷமித்ராவின் மருத்துவர்கள் அடங்கிய குழுவானது மக்களைத் தெர்மோகிராம் எனப்படும்

ரூபாய் 3500/- மதிப்புள்ள மார்பக ஸ்கேனை ரூபாய் 500/- க்கு திருச்சி மாவட்டம் முழுவதும்

உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மக்கள் கூடும் இடங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு

சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செய்துள்ளது.

அதன் மற்றொரு பகுதியாக திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து மாணவர்களின் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்த உத்தேசித்து 19.10.2022 புதன்கிழமையன்று காலை 9மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலையில் துவங்கி ஜென்னிஸ் ஹோட்டல் வழியாக திருச்சி புகைவண்டி நிலைய ரவுண்டனா மற்றும் பெரிய மிளகு பாறை வழியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடையும்.

இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கூடுதல் நடுவர்

திருமதி,இரா.அபிராமி B.Tech அவர்கள் துவங்கிவைக்க இசைந்துள்ளார்கள்.

இந்த பேரணி நிகழ்வை சிறப்பிக்க தங்களின் மேலான ஆதரவை தருவதோடு பொதுமக்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெற எங்களோடு கைகோற்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி, வணக்கம்.

இப்படிக்கு

மரு.க.கோவிந்தராஜ் நிர்வாக இயக்குனர்
Attachments area

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

10.10.2022,
Trichy engineering college,
ஹர்ஷ மித்ரா மருத்துவமனை யின் சார்பில் மாபெரும் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் பெண்கள் 100 க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்.
பொதுவான புற்று நோய் அறிகுறிகள் பெண்களுக்கு வரக்கூடிய முதன்மை புற்று நோய் தடுப்பு முறைகள் பற்றி
விளக்கபட்டது.
நிகழ்ச்சி யை பேராசிரியர். Dr. Joselin M. E., PhDஅவர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
அவர்கள் ஹர்ஷ மித்ரா மருத்துவமனை யின் சார்பில் கெளரவிக்கப் பட்டனர். Trichy engineering college
யின் சார்பில் ஹர்ஷ மித்ரா மருத்துவமனை யின் நிர்வாக இயக்குநர் களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிறப்பு நடமாடும் மார்பக பரிசோதனை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம், உலகெங்கிலும் மார்பக புற்றுநோய் மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி, இந்த மாதம் முழுவதும் பொது மக்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரச்சார வாகனம் ஒன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம், அக்டோபர் மாதம் முழுவதும் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று மார்பக புற்றுநோய் பற்றிய விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும்.

இந்த வாகனத்தில் பெண்மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு பயணம் செய்து, கல்லூரிகள், பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் ஆகிய பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, விருப்பமுள்ள பெண்களுக்கு, அந்த நடமாடும் வாகனத்திலேயே இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனையை மேற்கொள்ளும்.

மேலும், தேவைப்படும் பெண்களுக்கு, குறைந்த கட்டணத்தில் தெர்மோகிராம் ஸ்கேனிங் பரிசோதனையும் அந்த வாகனத்தில் செய்யப்படும்.

தெர்மோகிராம் பரிசோதனை என்பது, அகச்சிவப்பு கதிர்கள் கொண்ட கருவி மூலம் மார்பக பகுதியினை ஸ்கேன் செய்து, புற்று நோய் கட்டிகளை, அவை நம் கைகளுக்கு தெண்படுவதற்கு முன்னதாகவே கண்டு பிடிக்கும் முறையாகும்.
இந்த தெர்மோகிராம் பரிசோதனை வலியற்றது. மார்பகத்தை தொட வேண்டிய அவசியம் கிடையாது. பக்க விளைவுகள் அற்றது. ரூபாய் 3160 மதிப்புள்ள இந்த பரிசோதனை, இந்த பிரச்சார வாகனத்தில் ரூபாய் 500 க்கு செய்யபடுகிறது.

இந்த பிரச்சார வாகனத்தை திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா புற்று நோய் மருத்துவமனையில் இன்று காலை 10 மணிக்கு, நாகமங்கலம் பஞ்சாயத்து தலைவர் திரு.வெள்ளைச்சாமி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை பிரச்சார வாகன துவக்க விழாவில், ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் இயக்குனர், புற்று நோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர்.சசிப்பிரியா, மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

25.09.2022
இன்று காட்டூர், ஆயில் மில் பஸ் நிலையம் அருகே உள்ள Elim assembly யில் ஹர்ஷ மித்ரா மருத்துவமனை யின் சார்பில் மாபெரும் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் 250 க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்.
பொதுவான புற்று நோய் அறிகுறிகள்
ஆண்களுக்கு வரக்கூடிய புற்று நோய் மற்றும் பெண்களுக்கு வரக்கூடிய முதன்மை புற்று நோய் தடுப்பு முறைகள் பற்றி
விளக்கபட்டது.
நிகழ்ச்சி யை ELIM ASSEMBLY Rev. பீட்டர் ஆண்டனி அவர்கள் மற்றும் Mr.காஜாமொஹைதீன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
அவர்கள் ஹர்ஷ மித்ரா மருத்துவமனை யின் சார்பில் கெளரவிக்கப் பட்டனர்.
Elim assembly யின் சார்பில் ஹர்ஷ மித்ரா மருத்துவமனை யின் நிர்வாக இயக்குநர் களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

22.09.2022 வியாழக் கிழமை
செங்குளம் காலனி
பாலக்கரை
சமுதாய கூடத்தில்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட ம் மற்றும் HER voice foundation அமைப்பின் சார்பில்
ஹர்ஷ மித்ரா மருத்துவமனை பொது மற்றும் புற்று நோய் பரிசோதனை முகாம் நடத்தியது. ஹர்ஷ மித்ரா மருத்துவமனை மருத்துவ குழுவினர் பங்கு பெற்று புற்று நோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை கள் வழங்கினர்.

இதில் செங்குளம் காலனி பகுதியைச் சேர்நத 100 பெண் கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் திரு. கண்ணன் அவர்கள் ஒருங்கிணைத்தார்

ஒருங்கிணைத்த திட்ட அலுவலர் மற்றும் HER foundation மற்றும் சத்துணவு மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் ஹர்ஷமித்ரா மருத்துவ மனை மற்றும் Rose garden அறக்கட்டளை சார்பில் அன்பும் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

20.9.2022
ஹர்ஷமித்ரா மருத்துவ மனை யின் சார்பில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி யானது
செயின்ட் ஜோசப் உயர் நிலைப் பள்ளி, நாகமங்கலத்தில் நடைபெற்றது.
இதில் 60 மாணவிகள் பங்கு பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காவேரி கல்லூரி யின் social work department மாணவிகள் ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பள்ளி மாணவிகள் புற்று நோய் பற்றிய விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
நிகழ்ச்சி பயனுள்ள வகையில் நடத்தியமைக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஹர்ஷமித்ரா மருத்துவ மனை நிர்வாக இயக்குநர் களுக்குக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.