Gallery

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

CAPTION : Harshamitra Hospital tie up with Dhanalakshmi Srinivasan
Medical and Dental College.
DESCRIPTION :Harshamitra Hospital is proud to collaborate with
Dhanalakshmi Srinivasan Medical and Dental colleges for the
Radiotherapy treatment of Cancer Patients. Together we can deliver better
service to the cancer patients.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ராவின் செயல்பாடுகளில் திருச்சி மாவட்டம் முழுதும் உள்ள கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக கல்லூரிகள் கல்லூரிகள் தோறும் புற்றுநோய் விழிப்புணர்வு என்ற தலைப்பில் புற்றுநோய் பற்றிய கருத்து அரங்குகள் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று எட்டாம் நாளாக (8/2/2023)திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சீதாலட்சுமி ராமசாமி பெண்கள் தன்னாட்சி கல்லூரியில் உணவு மற்றும் போஷாக்கு அதாவது நியூட்ரிஷியன் அண்ட் டைட்டீஷியன் துறையில் பயின்று வரும் மாணவிகளுக்கு நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாகி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் இந்த நிகழ்வில் சுமார் 70 மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வின் தொடக்கமாக நியூட்ரிஷன் டிபார்ட்மென்ட் தலைவர் அவர்கள் நம் மருத்துவரை வரவேற்று கவுரவிக்க விழாவானது தொடங்கியது .இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவரும் புற்றுநோயை பற்றி ஒன்றுமே தெரியாமல் அமர்ந்திருந்த அவர்கள் புற்றுநோய் என்றால் என்ன புற்றுநோய் எவ்வாறு வருகிறது அது எந்த விதத்தில் பரவுகிறது எவ்வாறு உயிர் கொள்ளியாக மாறுகிறது என்ற எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்த அவர்கள் உரை நிகழ்வில் அனைத்தையும் புரிந்து கொண்டு புற்றுநோய் என்றால் என்ன தெரிந்து கொண்டோம் புற்றுநோய் பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் வராமல் தடுப்போம் அதற்கான வழிமுறைகள் என்னவென்று நாங்கள் நன்றாக புரிந்து கொண்டோம் என்ற உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு உரையின் நிறைவில் நம் மருத்துவரிடம் பலவிதமான சந்தேகங்களையும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்ற வழிமுறைகளையும் தெரிந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொண்டனர் மாணவர் மாணவிகள் புற்றுநோய் பற்றி புரிதலை ஏற்படுத்திய நமது மருத்துவமனை ஏற்படுத்தியுள்ள qr கோடில் பதிவு செய்து அதை ஒரு விழிப்புணர்வு சாதகமாக பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். விழா நிறைவில் நமது நிர்வாகி அவர்கள் துணைத்தலைவருக்கு பொன்னாடை போர்த்த நன்றி உரையுடன் விழா இனிதே முடிவடைந்தது .

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

இன்று 7.2.2023 நமது திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் உலக புற்றுநோய் தின நிகழ்வாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் கல்லூரியில் புற்று நோய்க்கான விழிப்புணர்வு பேருரையானது நமது ஹர்ஷமித்ராவின் நிர்வாக இயக்குனர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது இந்நிகழ்வில் முதல்வர் மற்றும் துறை தலைவர்கள் பங்கு கொண்டு நிறுவனத்தின் தாளாளர் திரு சீனிவாசன் ஐயா அவர்களால் கௌரவிக்கப்பட்டு இந்த நிகழ்வானது தொடங்கியது இந்த நிகழ்வில் 300 மாணவிகள் பங்கு கொண்டனர் நம் நிறுவனத் தலைவரின் அன்பான சொற்பொழிவை கேட்டு அவர்கள் புற்றுநோய் இல்லா உலகத்தை படைப்போம் என சபதம் ஏற்றுக் கொண்டனர் இன்று அவர்களுக்கா க இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற ஒரு கியூ ஆர் கோடு வழங்கப்பட்டது அதில் அவர்கள் கேன்சர் கான நிகழ்வுகளை நம் மருத்துவமனை மூலம் தெரிந்து கொள்வதற்கும் மற்றும் அவர்கள் கேன்சருக்கான புதிய பரிணாம நிகழ்வுகள் ஏதும் செய்வது என்றால் இந்த க்யூ ஆர் கோடை பயன்படுத்தி செய்வதற்கும் புற்றுநோயை ஒழிப்போம் என்ற சபதத்தை விடாமல் கடைப்பிடிப்போம் கடைப்பிடிப்பதற்காகவும் இந்த க்யூ ஆர் கோடு எனது இன்றைய தினத்தில் உருவாக்கப்பட்டது இதில் புற்றுநோய் பரவுவதை தடுப்பதற்கும் தங்களின் பெற்றோர்களுக்கு புற்றுநோய் வராமல் காப்பதற்கும் தாங்கள் புற்றுநோயிலிருந்து காத்துக் கொள்வதற்கும் அனைத்து மாணவிகளும் சபதம் ஏற்று கொண்டனர் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் விளம்பர துறையின் சார்பாக சிவ அருணாச்சலம் முபின் பேகம் மற்றும் டிரைவர் மதி நன்றி வணக்கம்

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

4.2.23 உலக புற்றுநோய் தினமான இன்று புற்றுநோய்க்காகவே இயங்கி வரும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை நாகமங்கலம் திருச்சி சார்பாக எமது மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான பரிசோதனைகள் ஆகிய மெமோகிராம் மார்பக புற்று நோயை கண்டுபிடிக்கும் சாதனம் தர் மோ கிராம் இதுவும் மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் சாதனம் பாப்ஸ்மியர் மற்றும் ஸ்கிரீனிங் சர்விகல் கேன்சர் என்று கூறப்படும்

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

இன்று 4.2.2023 உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர் ஜி கோவிந்தராஜ் வரர்தனன் சார் மற்றும் டாக்டர் பி சசி பிரியா கோவிந்தராஜ் அவர்கள் சமயபுரம் சீனிவாசன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மதுரை பல் மருத்துவ கல்லூரி கடலூர் பல் மருத்துவ கல்லூரி பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய இரண்டு நாள் உலக புற்றுநோய் தின பல் புற்றுநோய் பிரிவிற்கான மருத்துவ கருத்தரங்கில் புற்று நோய்க்கும் பல்லுக்கும் என்ன சம்பந்தம் எந்தெந்த வகைகளில் புற்றுநோயானது பல்லையும் பல் ஈறுகளையும் தாக்குகிறது என்பதை எவ்வாறு நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியதோடு அவ்வாறு பல் புற்றுநோய் ஏற்பட்டால் எவ்வாறு அதிலிருந்து நாம் காத்துக் கொள்வது அதை எவ்வாறு ஆரம்ப நிலையில் கண்டு கொள்வது என பேருரை ஆற்றினார்கள் இந்த நிகழ்வில் ஆயிரம் பல் மருத்துவர்களும் தனலட்சுமி சீனிவாசன் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பல் பயிற்சி மாணவர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் நன்றி வணக்கம்

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

இன்று 6 2 2023 இந்த நாளில் நமது திருச்சி நாகமங்கலத்தில் இயங்கி வரும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பல் சிறப்பு மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் அவர்கள் மருத்துவர் G.கோவிந்தராஜ் MBBS.,MS.,MCH.,FICS., அறுவை சிகிச்சை நிபுணர் அவர்கள் திருச்சி திருவானைக் கோவிலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பேருரை ஆற்றினார்கள் இந்த நிகழ்வில் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியின் முதல்வர் திருமதி லட்சுமி அவர்கள் தலைமை ஏற்க மற்றும் சோசியல் டிபார்ட்மென்ட் ஹச்ஓடி திருமதி சித்ரா அவர்கள் வரவேற்புரை வழங்க நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள் இந்த சொற்பொழிவில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு கொண்டு புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகளில் எவ்வாறு மாணவ மாணவிகளின் பங்குகள் அமைகின்றன என்பதை நமது எம்டி அவர்கள் தெளிவாக எடுத்துரைக்க அனைத்து மாணவர்களும் இன்றைய நாளில் புகைப்பதிலும் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை எடுப்பதிலும் பிறர் பயன்படுத்தும் பொழுதும் அதை தடுக்கும் வழிமுறைகளையும் கண்டிப்பாக தடுப்போம் எனவும் அவரவர் பிறந்த நாட்களில் தனது தாய் தந்தைகளுக்கு தேவையான பரிசோதனைகளை பரிசாக வழங்க வேண்டும் என்ற சிறப்புரையும் ஏற்று ஒவ்வொருவரும் இந்த புற்றுநோய் தினத்தில் உறுதிமொழி மேற்கொண்டனர் பின்பு ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியின் முதல்வர் அவர்களால் நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாகி அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பாக நிர்வாக இயக்குனர் அவர்கள் திருமதி சித்ரா மேடம் அவர்களை கௌரவித்தார்கள் பின்பு தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது இந்த நிகழ்வில் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டது சங்கரராமன் அவர்கள் சிவ அருணாச்சலம் அவர்கள் முபின் பேகம் அவர்களுக்கு நன்றி.