10 .7 .2022 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா உயிர் சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
இதில் ரோஸ் கார்டன் இணை மருத்துவ கல்லூரி, சர்வைட் கல்லூரி, பெரி யார் மணியம்மை கல்லூரி, இந்திரா கணேசன் இணை மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த செவிலிய மாணவ மாணவிகள் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் மருத்துவ பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டாக்டர் ஏகநாதன் MBBS., DA., MS
KAPV அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனை மற்றும் Dr. C. மணிமேகலை MBBS., DGO அவர்கள் கலந்து கொண்ட னர்
நிகழ்ச்சியின் தொடக்கமாக உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியினை யோககுரு திரு சின்னையன் அவர்கள் பயிற்றுவித்தார்
அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி கல்வி பயிலரங்கம் டாக்டர் K. குணசேகரன்
டாக்டர் ராதாகிருஷ்ணன் டாக்டர் G. சாய் விஸ்வநாத் மற்றும்
டாக்டர் K. சந்தோஷ் குமார் அவர்களால் நடத்தப்பட்டு செயல் முறை பயிற்சி விளக்கம் அளிக்கப் பட்டது.
முன்னதாக கல்வி பயிலரங்கத்திற்கு வந்திருந்தவர்களை ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் G கோவிந்தராஜ் அவர்கள் வரவேற்று பேசினார்
மேலும் ரோஸ் கார்டன் இணை மருத்துவ கல்லூரியின் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு சீருடைகளும் கல்வி புத்தகங்களும் வழங்கப்பட்டன .
நிகழ்ச்சியின் முடிவில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் .P சசிப்பிரியா கோவிந்தராஜ் அவர்கள் நன்றியுரை கூறினார்.
கல்வி பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற உதவி செய்த அரவிந்த ஃபார்முலா லிமிடெட் ஹைதராபாத் தெர் போஸ் பிரைவேட் லிமிடெட் ஹைதராபாத் அவர்களுக்கு சிறப்பு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
பயிற்சி மூலம் 100 மாணவ மாணவிகள் உயிர்காக்கும் அடிப்படை பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.