திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து
நடத்தும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி – தொடர்பாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதமானது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதி “பிங் அக்டோபர்” மாதம் என WHO அறிவித்துள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. உதாரணமாக அமெரிக்காவின் ஈபிள் டவர் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிர்வது. இதனைப் போலவே திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையும் கடந்த 4 ஆண்டுகளாக நமது திருச்சி மலைக்கோட்டையை இளஞ்சிவப்பு விளக்குகளால் ஒளிர்வித்தது.
அதுபோல் இவ்வாண்டும் தமிழக அரசின் மக்களைத்தேடி மருத்துவம் போல்
ஊர்ஷமித்ராவின் மருத்துவர்கள் அடங்கிய குழுவானது மக்களைத் தெர்மோகிராம் எனப்படும்
ரூபாய் 3500/- மதிப்புள்ள மார்பக ஸ்கேனை ரூபாய் 500/- க்கு திருச்சி மாவட்டம் முழுவதும்
உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மக்கள் கூடும் இடங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு
சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செய்துள்ளது.
அதன் மற்றொரு பகுதியாக திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து மாணவர்களின் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்த உத்தேசித்து 19.10.2022 புதன்கிழமையன்று காலை 9மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலையில் துவங்கி ஜென்னிஸ் ஹோட்டல் வழியாக திருச்சி புகைவண்டி நிலைய ரவுண்டனா மற்றும் பெரிய மிளகு பாறை வழியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடையும்.
இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கூடுதல் நடுவர்
திருமதி,இரா.அபிராமி B.Tech அவர்கள் துவங்கிவைக்க இசைந்துள்ளார்கள்.
இந்த பேரணி நிகழ்வை சிறப்பிக்க தங்களின் மேலான ஆதரவை தருவதோடு பொதுமக்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெற எங்களோடு கைகோற்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி, வணக்கம்.
இப்படிக்கு
மரு.க.கோவிந்தராஜ் நிர்வாக இயக்குனர்
Attachments area