உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் 01/02 / 2023 அன்று காலை 10 மணி அளவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சிறப்புரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் 900 மாணவ மாணவிகள், ஊழியர்கள், கல்லூரியின் முதல்வர், தாளாளர் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் தமது உரையில் புற்றுநோய் என்றால் என்ன, அதில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது, பிறருக்கும் புற்றுநோய் வராமல் எவ்வாறு தடுப்பது, அதற்கான வழிமுறைகளை எல்லோரும் எளிமையாக புரிந்து கொள்ளும் அளவில் உரையாற்றினார். அதோடு பங்கு கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளும் புற்று நோய்க்கான தடுப்பு முறையில் நாங்கள் தொண்டாற்றுவோம் எவ்வாறு எனில், எங்கள் பெற்றோர்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான விதிமுறைகளை முதலில் கூறுவோம். பின்பு எங்களது கைபேசியில் ஒரு whatsapp குரூப் அமைத்து அந்த குரூப்பில் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி,ஆரம்பத்திலே எவ்வாறு குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் கூறிய அனைத்து செய்திகளையும் அதில் பதிவிட்டு அதை பார்க்கும் ஒவ்வொருவரும் புகை பிடிக்காமலும், குட்கா,ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள், மதுப்பழக்கம் இருந்தால் அதை தடுக்கும் முயற்சியில் நாங்கள் அனைவரும் பங்கு கொள்வோம் என்று சபதம் மேற்கொண்டனர். பின்பு கல்லூரியின் முதல்வர் அவர்களால் மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கௌரவிக்கப்பட்டார் .
இந்த விழாவில் அசிஸ்டன்ட் கமிஷனர் சுரேஷ்குமார் அவர்களும் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.