இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நமது ஹர்ஷமித்ரா மருத்துவ மனை சார்பாக திருச்சி மணிகண்டத்தில் அமைந்துள்ள இந்திரா கணேசன் பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் அவர்கள் பங்கு கொள்ள நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அவர்கள் தலைமை ஏற்று சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் இந்த நிகழ்வில் இந்திரா கணேசன் கல்லூரியின் படிக்கும் திரளான மாணவர்கள் ஏறக்குறைய 300 மாணவர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் புற்றுநோய் எவ்வாறு வருகிறது நாம் நம்மை காத்துக் கொண்டு பிறருக்கும் வராமல் தடுப்பது எந்த விதத்தில் சாத்தியம் என்பதை நமது நிர்வாக இயக்குனர்கள் அழகாக எடுத்துரைக்க மாணவர்கள் அனைவரும் நன்றாக புரிந்து கொண்டு இன்றைய நாளில் புகை சம்பந்தப்பட்ட எந்த வஸ்துக்களையும் புகையிலை சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் தொடுவதில்லை அவ்வாறு உபயோகித்தவர்களை தடுப்பதற்கும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் ஒவ்வொரு மாணவர்களும் மாணவிகளும் தங்களது தாய் மீது கொண்ட பாசத்தை புற்றுநோய் வராமல் தடுக்கும் சில பரிசோதனைகள் செய்து புற்றுநோய் வராமல் தடுப்போம் புற்றுநோயின் பிடியிலிருந்து பெற்றோர்களை
காப்போம் என உறுதி மேற்கொண்டனர்